பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி


பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
x

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

திருச்சி

திருச்சி, கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கேம்போபெஸ் -22 முன்னிட்டு திருச்சி மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நாக் அவுட் முறையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 11 பள்ளி அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி அணிகள் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றன. இறுதி போட்டியில் முதலில் விளையாடிய ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி 16.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 102 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.


Next Story