கிரிக்கெட் போட்டி
உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்ற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி தலைமையில் தி.மு.க.இளைஞரணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 26 அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். அவருடன் உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் முருகானந்தம், கண்ணமநாயக்கனூர்செந்தில்வேல் சின்னவீரம்பட்டி தனபாலன்,ெரயில் நாகராஜன், கணக்கம்பாளையம் அய்யாவு ,பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.. பாபு உள்பட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.