3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்; போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேட்டி


3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்; போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றங்கள் தடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு மூலம் குற்றங்கள் தடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறினார்.

பேட்டி

தூத்துக்குடியில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 43 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் ஈடுபட்டவர்கள் 14 பேர் உட்பட 270 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் 234 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் ஆயிரத்து 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.90 லட்சத்து 2 ஆயிரத்து 38 மதிப்புள்ள 10 ஆயிரத்து 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக ஆற் றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் இந்த ஆண்டு 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்புள்ள 17.80 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் 49 பேர்

இந்த ஆண்டு இதுவரை 77 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 211 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் கொலையை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 543 பேரிடம் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டு, அதனை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதல்கள், வன்முறை, பழிக்குப்பழி வாங்கும் கொலை ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு (திரி டயர் ரவுடிசம் மானிட்டரிங் சிஸ்டம்) பின்பற்றப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கொலை குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டு உள்ளது.

890 போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றத்தை தேடி என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 425 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, அதில் கலந்துகொண்ட 71,995 பேரிடம் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் எனவும், சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருப்போம் எனவும் உறுதி மொழி எடுக்கப்பட்டு அதற்கென பாராமரிக்கப்படும் பதிவேடுகளில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.

புத்தாண்ைட முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 890 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story