விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்


விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்
x

வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்த பணியாக விவசாயிகள், பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்


வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்த பணியாக விவசாயிகள், பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்காப்பீடு

2022-23 ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவுசெலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.

கட்டணம்

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் குளிர் கால பருவ நெற்பயிருக்கு வருகிற நவம்பர் 15-ந் தேதி வரையிலும், பச்சை பயறு, உளுந்து ஆகிய பயிர்களுக்கு பிப்ரவரி 15-ந் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு ஜனவரி 31-ந் தேதி வரையிலும், கரும்பு, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மார்ச் 31-ந் தேதி வரையிலும், எள் பயிருக்கு மார்ச் 15-ந் தேதி வரையிலும், மரவள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரையிலும் காப்பீடு செய்யலாம்.காப்பீட்டு கட்டணமாக நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.513, பச்சைபயறு, உளுந்து பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.78, நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.405, கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.207.75, மரவள்ளி ஏக்கருக்கு ரூ.1018 மற்றும் வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3340 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடைசி தேதி

எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.மேற்படி பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story