சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்


சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்
x

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்றும் ஏக்கருக்கு ரூ.513 பிரீமியம் செலுத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்றும் ஏக்கருக்கு ரூ.513 பிரீமியம் செலுத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்காப்பீடு திட்டம்

பிரதமர் பயிர்க்காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்த மற்றும் அதி நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிக்க ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பிரீமியம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 15-ந் தேதி ஆகும்.இந்த திட்டத்தில் நெல் சம்பா, பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.513 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம் ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது தேசிய வங்கி அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தவறான பதிவுகள்

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது ஒரே சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பைவிட கூடுதலாக பதிவு செய்தாலோ, பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும். விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது அவர்களின் அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு செய்யலாம்.எனவே, விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்பு விரைவில் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story