ெநற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்; விவசாயிகள் வேதனை
ெநற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்; விவசாயிகள் வேதனையடைந்தனர்.
புதுக்கோட்டை
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பாலையூர், மணியம்பலம், குளவாய்ப்பட்டி, கத்தக்குறிச்சி, பூவரசகுடி, திருவரங்குளம், பெரியநாயகிபுரம், திருவுடையார்பட்டி, களங்குடி, வல்லத்திராக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகின. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதைதொடர்ந்து நெல் பாதிப்புகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு துரிதமாக செயல்பட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story