தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை பயிர்கள்
தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை பயிர்கள்
தஞ்சாவூர்
சாலியமங்களம் பகுதியில் குறுவை நடவு பணிகள் நடைபெற்று வந்தது.
குறுவை நடவு செய்த வயல்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் நிலை உள்ளது. விவசாய தேவைக்காக மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் வெட்டாறு வெண்ணாற்றில் முறையாக தண்ணீர் திறந்து விடப் படாததால் வாய்க்கால்களில் சரிவர தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் சாலியமங்களம் பகுதியில் குறுவை நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி காய்ந்து வருகின்றன. எனவே தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் முறை வைக்காமல் கடைமடை வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story