பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்தஆழ்கடல் மீன்பிடி படகுகள்


பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்தஆழ்கடல் மீன்பிடி படகுகள்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தூக்குப்பாலத்தை ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில்வே தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் கேரளா செல்வதற்காக ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆழ் கடல் பகுதியில் மீன் பிடி படகுகள் கடந்து செல்வதற்காக பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது. தென்கடல் பகுதியில் இருந்து சில விசைப்படகுகள் தூக்கு பாலத்தை கடந்து சென்றன.

அதை தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் இருந்து நாகப்பட்டினத்தில் இருந்து வந்த கேரளா மற்றும் தூத்துக்குடி செல்வதற்காக 30-க்கும் மேற்பட்ட ஆழ் கடல் மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வந்து தூக்கு பாலத்தை மெதுவாக கடந்து சென்றன.

அப்போது மீன்பிடி படகு ஒன்று தூக்குபாலத்தை கடக்க வரும் வழி பாதை விலகி ஆழம் குறைவான பகுதிக்கு சென்றதால் பாறையின் மீது ஏறி நின்றது. தொடர்ந்து உடன் வந்த மீன்பிடி படகு உதவியுடன் கயிறு கட்டி அந்த படகானது பாதுகாப்பாக மீட்டு இழுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த படகும் தூக்கு பாலத்தை கடந்து சென்றது. ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பணிகள் பார்த்து செல்போனிகளிலும் படம் பிடித்து மகிழ்ந்தனர்.


Next Story