கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ராமநாச்சியப்பன் தலைமையில் நடைெபற்றது. ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா (தணிக்கை) கலந்து கொண்டார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு-செலவு திட்ட விவரம், வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல், ஊராட்சியில் நடைபெறும் மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் பட்டா இடமின்றி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டமுடியாதவர்களுக்கு அரசு பட்டா இடம் வழங்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கல்லல் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி, சங்குஉதயகுமார், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ராதிகா, வார்டு உறுப்பினர்கள் காளீஸ்வரி, அஞ்சலை, அமுதா, பழனிவேலு, அந்தோணிசாமி, பர்வின்பானு, சங்கர், செல்வகுமார், வனிதா, மெர்சி, ராஜா முகமது, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வடிவேலு, முன்னாள் கல்லல் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, விவசாயத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அழகுமுத்து நன்றி கூறினார்.


Next Story