தேவகோட்டை நகராட்சி கூட்டம்
தேவகோட்டை நகராட்சி கூட்டம் நடைபெற்றது
தேவகோட்டை
தேவகோட்டை நகர்மன்ற கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், ஆணையாளர் (பொறுப்பு) திருமால்செல்வம், மேலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தேவகோட்டை கல்லூரி சாலை என்பதை சேவுகன் அண்ணாமலை கல்லூரி சாலை என மாற்றம் செய்வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் அம்மா உணவகத்தை பராமரிப்பது என்றும் பஸ் நிலையத்தில் பழுதான மழைநீர் வடிகால் மூடிகளை மாற்றுவது என்றும் நகராட்சிக்கு சொந்தமான ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வளர்ந்து உள்ள மரங்கள் புல் செடிகளை பராமரிக்க எந்திரங்கள் வாங்குவது என்றும் நகரில் தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏதுவாகவும் புதிய தார் சாலைகள் பேவர் பிளாக் சாலைகள் போடவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.