பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்


பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
x

பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

திருவாரூர்

மன்னார்குடி கடைத்தெருவில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று மன்னார்குடி கடைத்தெருவில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் மன்னார்குடிக்கு வந்ததால் நேற்று மாலை கடைத்தெருவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மஞ்சள், கரும்பு, வாழைப்பழம் மற்றும் மாட்டு பொங்கலுக்கு தேவையான கயிறு, மாலைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி

கரும்பு, மஞ்சள், வாழைப்பழம், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், மாலைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக ஏராளமாக தற்காலிக கடைகளை வியாபாரிகள் சாலை ஓரங்களில் போட்டிருந்தனர். நேற்று மாலை கடைத்தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் மன்னார்குடியில் பொங்கல் விழா களை கட்டியது. பொங்கல் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story