வார விடுமுறை கொண்டாட குவிந்த மக்கள் - திண்டாடிய கொடைக்கானல்


வார விடுமுறை கொண்டாட குவிந்த மக்கள் - திண்டாடிய கொடைக்கானல்
x

வார விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் வார விடுமுறை நாளான இன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மலைச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story