பாய்ந்த வீரர் பயந்து அலறிய பெண் பயணி ...! போதையில் முத்த சாகசம் மாட்டிகொண்ட சி.ஆர்.பி.எப் வீரர்
சுரேஷை பிடித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சுரேஷ் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்வீரராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
ஜோலார்பேட்டை
கர்நாடகாவில் இருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியில், பெங்களூரைச் சேர்ந்த 38 வயதான பெண் பயணித்துக்கொண்டிருந்தார். ரெயில், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையைக் கடந்து காட்பாடியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அந்த சமயத்தில், அருகில் மதுபோதையில் அமர்ந்து பயணம்செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 38 வயதாகும் சுரேஷ் என்பவர், அந்தப் பெண்மீது பாய்ந்து முத்தம் கொடுத்திருக்கிறார். சுரேஷின் பிடியில் சிக்கி அலறிய அந்தப் பெண்ணை சக பயணிகள் மீட்டிருக்கிறார்கள்.
பின்னர், சுரேஷை பிடித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சுரேஷ் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்வீரராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
சம்பவம் நடைபெற்ற இடம், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரின் எல்லைக்குள் வருவதால், அந்தப் போலீசாரிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சி.ஆர்.பி.எப் வீரர் சுரேஷை கைதுசெய்து, போதையை தெளியவைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.