முறிந்து விழும் நிலையில் இரும்பு கோபுரம்


முறிந்து விழும் நிலையில் இரும்பு கோபுரம்
x
தினத்தந்தி 17 July 2023 1:00 AM IST (Updated: 17 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தில் இரும்பு கோபுரம் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தில் இரும்பு கோபுரம் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொலை தொடர்பு சாதனங்கள்

தமிழக கடலோர மாவட்டங்களை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதையடுத்து கடலோர கிராம பகுதிகளில் தொலை தொடர்பு சாதனங்கள், சுனாமி எச்சரிக்கை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே தொலை தொடர்பு வசதிக்காக இரும்பு கோபுரம் அமைக்கப்பட்டது. செல்போன் கோபுரம் போன்று கட்டப்பட்ட இந்த கோபுரத்தின் மூலம் தகவல் பெறுவதற்கு எளிதாக இருந்தது.

முறிந்து விழும் அபாயம்

இந்த கோபுரம் கடந்த சில ஆண்டுகளாக செயல் இழந்து காணப்படுகிறது. பயனும் இல்லாமல் இருந்து வரும் இந்த இரும்பு கோபுரம் துருப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக கோபுரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இதனை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி சார்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பலத்த காற்று வீசும்போது இரும்பு கோபுரம் முறிந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த இரும்பு கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story