கடலூர்: ஒரே நாளில் ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
மீதமுள்ள சிலைகளை நாளை மறுநாள் கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூரில் 1236 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்றாம் நாளான இன்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல் துறை சார்பில் தன்னார்வ குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் எந்த இடத்தில் இருந்து எடுத்துவந்தாலும், அவர்கள் வெள்ளிகடற்கரையில் தன்னார்வ குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் ஆயிரம் சிலைகளை கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள சிலைகளை நாளை மறுநாள் கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story