வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் திருடிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை -கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு
கூடலூரில் பூட்டிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை திருடிய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கூடலூர்
கூடலூரில் பூட்டிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை திருடிய வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
3 பவுன் தங்க நகைகள் திருட்டு
கூடலூர் பிவிசி நகரைச் சேர்ந்தவர் புஷ்பா மேரி. கூலி தொழிலாளியான இவர் கடந்த 13.2.2023 அன்று தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். இதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்றார். இது குறித்து புஷ்பா மேரி கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அருள், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரன், இப்ராகிம், பிரதீப் குமார், வெள்ள தங்கம் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கூடலூர் காசிம் வயலை சேர்ந்த பிரசாந்த் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கு விசாரணை கூடலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
4 ஆண்டுகள் சிறை
நேற்று நீதிபதி சசின் குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதேபோல் கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் சந்திரசேகர் என்பவர் கடந்த ஆண்டு இரவு பணியில் இருந்த சமயத்தில் அவரின் வாக்கி டாக்கி திருட்டு போனது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் பிரசாந்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கூடலூர் கோர்ட்டில்நடைபெற்று வந்த நிலையில் நேற்று மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.100 அபராதம் விதித்து நீதிபதி சசின்குமார் உத்தரவிட்டார்.