கடலூர் கரையேறவிட்டக்குப்பம் முத்துவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
கடலூர் கரையேறவிட்டக்குப்பம் முத்துவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் கரையேறவிட்டக்குCuddalore Karayeravittakuppam Muthuvazhi Amman Temple Kumbabhishekam Crowd of Devotees Darshanப்பத்தில் முத்துவாழி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கடந்த 8-ந் தேதி முதல் கால யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றி சிலைகள் மற்றும் கோபுர கலசங்களை படிய வைத்தல் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணியளவில் நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம் மற்றும் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 10 மணியளவில் முத்துவாழி அம்மன் கோவில் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.