கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை(செவ்வாய்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பாதிரிப்புலியூர் பகுதி
கடலூர் கேப்பர்மலை, செம்மங்குப்பம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோர்பாளையம், மதிமீனாட்சிநகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
கடலூர் முதுநகர் பகுதி
மேலும் கடலூர் துறைமுகம், கடலூர் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானூர், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, செல்லங்குப்பம், ஏணிக்காரன்தோட்டம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர்ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், கிஞ்சம்பேட்டை, சிவானந்தபுரம், நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சாலைக்கரை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லிக்குப்பம் பகுதி
நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேல் கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, கோழிபாக்கம், மேல் பட்டாம்பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபு குளம், மேல் குமாரமங்கலம், அண்ணா கிராமம், பக்கிரி பாளையம், முத்து கிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.