கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில்விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் ஆய்வு
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் கடலூர் வருகை தந்தார். அதையடுத்து அவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வருகை பதிவேடு, எத்தனை வழக்குகள் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரம், ரவுடிகள் பட்டியல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்குகள் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள், தலைமறைவு குற்றவாளிகள் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விவரங்களை ஆய்வு செய்தார். ஆவணங்களையும் சரிபார்த்தார்.
அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். பழைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை போலீசாருக்கு வழங்கி னார். அதன்பிறகு கடலூர் உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்களிடம் வழக்கு விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் மரக்கன்று நட்டு வைத்தார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார், தேவேந்திரன் உடனிருந்தனர்.