புற்றுநோய், சா்க்கரை நோய்க்கான மருந்து தருவதாக கூறிகடலூா் பெண்ணிடம் ரூ.32¾ லட்சம் மோசடி4 பேர் கைது; பரபரப்பு தகவல்


புற்றுநோய், சா்க்கரை நோய்க்கான மருந்து தருவதாக கூறிகடலூா் பெண்ணிடம் ரூ.32¾ லட்சம் மோசடி4 பேர் கைது; பரபரப்பு தகவல்
x

புற்றுநோய், சா்க்கரை நோய்க்கான மருந்து தருவதாக கூறி கடலூா் பெண்ணிடம் ரூ.32¾ லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்


ஆன்லைனில் சம்பாதிக்க ஆசை

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவரது மின்னஞ்சலுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்த போது, அதில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், அதன் ஒரு லிட்டர் விலை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் எனவும், அதனை வாங்கி சப்-டீலராக விற்பதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதை நம்பிய செல்வி, அந்த குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் செல்போனில் பேசிய நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர்கள், மருந்து ஏதும் கொடுக்கவில்லை. அப்போது தான், அவர்கள் தன்னிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

4 பேர் சிக்கினர்

இதையடுத்து செல்வி, கடலூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், செல்வி தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண் மற்றும் அவருக்கு வந்த மின்னஞ்சல் முகவரி அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

மேலும் சென்னை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியதில், செல்வியுடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் நைஜீாியாவை சேர்ந்த ஓகாரியே காட்ஸ்வில் சின்னாசா (வயது 32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இம்மானுவேல் (42), எபோசி உச்சென்னா ஸ்டேன்லே (32) என்பதும், தற்போது மராட்டிய மாநிலம் கார்காாில் தங்கியிருந்ததும், அவர்கள் மற்றொரு வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து கடலூர் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்வியிடம் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story