கடலூர் சில்வர் பீச்சில் தூய்மை பணி
கடலூர் சில்வர் பீச்சில் தூய்மை பணி நடைபெற்றது.
கடலூர்
தமிழ்நாடு வனத்துறை மற்றும் கடலூர் மாநகராட்சி சார்பில் கடலூர் சில்வர் பீச்சில் கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமை தாங்கி, தூய்மை பணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கடலூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் பாலசுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் அப்துல் அமீது ஆகியோர் கடற்கரை தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.
பின்னர் கடலூரில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் கடற்கரை பகுதியில் மட்டும் சுமார் 750 கிலோ குப்பைகள் அள்ளி அகற்றப்பட்டது. அதன் பிறகு அனைவரும் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் வனத்துறை ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story