ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் கலாசார போட்டி
சேரன்மாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் கலாசார போட்டி நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் பல்வேறு கலைக்கல்லூரிகள் பங்கேற்ற 'வின்னிங் ஸ்டார்ஸ்' கலாசார போட்டிகள் நடைபெற்றது. இதில் வினாடி-வினா, ரங்கோலி, மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், அடுப்பில்லா சமையல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஸ்காட் வளாகத்தின் பொது மேலாளர் தம்பித்துரை தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜெனிபா மேரி வரவேற்றார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஸ்காட் கல்வியியல் கல்லூரி முதல்வர் பியூலா கல்வியியல் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஸ்காட் குழுமத்தின் மாணவர் சேர்க்கை இயக்குனர் ஜான் கென்னடி வேதநாயகம், திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. அதிக பங்களிப்பு மற்றும் அதிக புள்ளிகளை பெற்ற ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கலைக்கல்லூரி ஒட்டுமொத்த ஸ்காட் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், பொருளறிவியல் துறை உதவி பேராசிரியருமான சாம் ஜெபத்துரை வின்னிங் ஸ்டார் போட்டிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். முடிவில், பேராசிரியர் மணிமேகலா நன்றி கூறினார்.