பழங்குடியின மக்களின் கலாசார கண்காட்சி
ஊட்டியில் பழங்குடியின மக்களின் கலாசார கண்காட்சி நடந்தது.
ஊட்டி
கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர் காட்டுநாயக்கர் ஆகிய 6 வகை பழங்குடியின மக்களின் வாழ்வியல் சார்ந்த கலாசாரம், அவர்களது அடையாளங்கள், கோவில் மற்றும் தொழில்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இந்த கண்காட்சியில் பனியர்களின் காதோலை கம்மல், தோடர் மக்களின் கோவில், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள், குறும்பர், காட்டுநாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை சார்ந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.