கலாசார திருவிழா


கலாசார திருவிழா
x

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் கலாசார திருவிழா நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 'கெட் ஸ்மார்ட்-2023' என்ற தலைப்பில் கலாசார திருவிழா நடைபெற்றது. கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற விழாவில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரி இளங்கலை பிரிவு மாணவ-மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி 2-வது முறையாக தட்டிச் சென்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்காட் கல்வி வளாக பொதுமேலாளர் தம்பித்துரை பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியினை சண்முகசுந்தரம் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் ராஜலட்சுமி, நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story