கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்தமிழ் மரபு-பண்பாட்டு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
பரப்புரை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசினார். இதில், "வாழ்வில் தடம் பதிக்கும் தமிழ் கதைகள்" என்ற தலைப்பில் செல்லதுரை கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரன், முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பன்னீர்செல்வம், தாசில்தார் விஜயகுமார், கல்லூரி முதல்வர்கள் உமா, அனுராதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் கல்லூரி மாணவர்களிடையே உணர்த்தும் வகையில் "மாபெரும் தமிழ் கனவு" என்ற பெயரில் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 24-ந் தேதி, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் நடத்தப்பட்டன.
மாணவர்களுக்கு சான்றிதழ்
இந்த நிகழ்ச்சியை உயர்கல்வித்துறையுடன் தமிழ் இணைய கல்வி கழகம் இணைந்து நடத்தின. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்கள், தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.