கம்பம் ஒன்றிய அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


கம்பம் ஒன்றிய அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

கம்பம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் சுருளி அருவியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

தேனி

கம்பம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சுருளி அருவியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சையதுகான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி-மதுரை இடையிலான ரெயில்பாதை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்த தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு நன்றி தெரிவித்தும், புதிய நிர்வாகிகளுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story