கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்தி வெட்டு


கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்தி வெட்டு
x

கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

பள்ளிகொண்டாவை அடுத்து வெட்டுவானம் அம்பேத்கர் நகரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. சம்பவத்தன்று இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. அப்போது முன்னாள் கவுன்சில் பன்னீர் என்பவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் தாக்கியுள்ளார். இதனால் திருவீதி உலா பாதியில் நின்றது‌. பன்னீரை தாக்கிய விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழா குழுவினர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மீண்டும் போலீசார் முன்னிலையில் திருவீதி உலா நடந்தது.

இந்த நிலையில் திருவிழாவின்போது அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகன் ராஜன் (26) என்பவரை ராஜ்குமார் கத்தியால் வெட்டி உள்ளார். பலத்த காயம் அடைந்த ராஜன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்த மோதலால் விழா பாதியிலேயே நின்றது.


Next Story