குடிநீர் கிணற்றின் மின்மோட்டாருக்கான மின் கம்பியை அறுத்து திருட்டு
பாலானந்தல் ஊராட்சியில் குடிநீர் கிணற்றின் மின்மோட்டாருக்கான மின் கம்பியை மர்மநபர்கள் அறுத்து திருடடி உள்ளனர்.
திருவண்ணாமலை
பாலானந்தல் ஊராட்சியில் குடிநீர் கிணற்றின் மின்மோட்டாருக்கான மின் கம்பியை மர்மநபர்கள் அறுத்து திருடடி உள்ளனர்.
திருவண்ணாமலை அருகில் பாலானந்தல் ஊராட்சியை சேர்ந்த தெற்கத்தி கொட்டாமேடு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு அங்குள்ள கிணறறில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த கிணற்றின் மின் மோட்டாருக்கான மின்கம்பியை மர்ம நபர்கள் பியூஸ் கேரியரை பிடுங்கி எறிந்து விட்டு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 50 மீட்டர் செம்பு மின் கம்பியை அறுத்து திருடி சென்று உள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயாங்குளம் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றின் மின் மோட்டாருக்கான ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 10 மீட்டர் செம்பு மின் கம்பியை மர்ம நபர்கள் அறுத்து திருடி சென்று உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மங்கலம் போலீசில் பாலானந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கவேல் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.