ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு


ஆட்டோ டிரைவருக்கு கத்தி வெட்டு
x

குடியாத்தம் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி சானாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40) சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கே.வி.குப்பத்தை அடுத்த மங்கானிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தரகுமார். இவரது மகன் நடராஜன் (32). இவர் மீது ஏற்கனவே அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. இவரும் விக்னேஷும் உறவினர்கள்.

நேற்று முன்தினம் விக்னேஷின் வீட்டிற்கு நடராஜனும், கீழ்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் சென்றுள்ளனர். அப்போது கோவிந்தராஜ் தரப்புக்கும், விக்னேஷ் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன், விக்னேஷ் ஆகியோர் கத்தியால் கோவிந்தராஜ் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கோவிந்தராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் வழக்குப் பதிவு செய்து நடராஜன், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story