மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு


மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே இரவில் தொந்தரவாக இருந்ததால் மனைவியிடம் சிரித்து பேசிய கணவரை அரிவாளால் வெட்டிய பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே இரவில் தொந்தரவாக இருந்ததால் மனைவியிடம் சிரித்து பேசிய கணவரை அரிவாளால் வெட்டிய பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது44) தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை ேசர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இரவு பிராங்கிளின் தனது மனைவியுடன் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ் 'நீங்கள் இரவில் சத்தம் போட்டு சிரித்து பேசுவதால் எனக்கு தூக்கம் வரவில்லை' எனக்கூறி தகராறு செய்தார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

அரிவாள் வெட்டு

அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிராங்கிளினை வெட்ட பாய்ந்து வந்தார். சுதாரித்து கொண்ட பிராங்கிளின் அதனை கையால் தடுக்க முயன்றார். இதில் அவரது இடது கையில் வெட்டுகாயம் ஏற்பட்டது. அத்துடன் மேலும் பல இடங்களில் வெட்டி விட்டு ராேஜஷ் தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த பிராங்கிளின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story