எலக்ட்ரீஷியனுக்கு கத்தியால் வெட்டு
திருமண மண்டபத்துக்குள் புகுந்து எலக்ட்ரீஷியனுக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.
திருவட்டார்:
திருமண மண்டபத்துக்குள் புகுந்து எலக்ட்ரீஷியனுக்கு கத்தியால் வெட்டு விழுந்தது.
ஆற்றூர் அருகே உள்ள புதுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 33), எலக்ட்ரீஷியன். இவருக்கும் ஆற்றூர் வட்டவிளையை சேர்ந்த எட்வின்சிங் (35) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. எட்வின் சிங் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆற்றூர் மங்களாநடை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த எட்வின்சிங் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் ஸ்டாலினை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு நின்றவர்கள் எட்வின்சிங்கை மடக்கி பிடித்து திருவட்டார் போலீசிடம் ஒப்படைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து எட்வின்சிங்கை கைது செய்த போலீசார் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.