கத்தியால் கையை அறுத்துக்கொண்டு தூக்குப்போட்டு தனியார் கல்லூரி காவலாளி தற்கொலை


கத்தியால் கையை அறுத்துக்கொண்டு  தூக்குப்போட்டு தனியார் கல்லூரி காவலாளி தற்கொலை
x

கத்தியால் கையை அறுத்துக்கொண்டு தூக்குப்போட்டு தனியார் கல்லூரி காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பெருந்துறை

கத்தியால் கையை அறுத்துக்கொண்டு தூக்குப்போட்டு தனியார் கல்லூரி காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காவலாளி

பெருந்துறையை அடுத்த பட்டக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது39). இவருக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மஞ்சுநாதன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் விடுப்பு எடுத்து சொந்த ஊரான பட்டக்காரன்பாளையத்துக்கு வந்து உள்ளார். ஆனால் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களாக அவர் குடித்துவிட்டு வீட்டில் தங்காமல் அங்கும், இங்குமாக சுற்றி வந்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு அவருடைய மனைவி வசந்தி சமையல் வேலைக்காக பெருந்துறைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற மஞ்சுநாதன், நன்றாக குடித்துவிட்டு அருகே உள்ள அவருடைய தம்பி ஈஸ்வரன் என்பவருடைய வீட்டுக்கு சென்று உள்ளார்.

பின்னர் அவர் அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன், கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை அறுத்து கொண்டாராம். உடனே அங்கிருந்தவர்கள் அவரிடம் சமாதானம் பேசி, ரத்தம் வழிந்த கைக்கு கட்டுப்போட்டு, அன்று இரவு அங்கேயே அவரை படுக்க வைத்து உள்ளனர். பின்னர் மறுநாளான நேற்று மஞ்சுநாதன் படுத்திருந்த அறைக்குள் ஈஸ்வரன் சென்று பார்த்து உள்ளார். அப்போது சேலையால் மஞ்சுநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

தற்கொலை மிரட்டல்

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மஞ்சுநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'குடிபோதையில் மஞ்சுநாதன் ஏற்கனவே சீனாபுரம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும், மின்சார டிரான்ஸ்பார்மர் மேல் ஏறி கலாட்டா செய்ததும்,' தெரிய வந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story