வாலிபரிடம் ரூ.23 ஆயிரம் மோசடி சைபர்கிரைம் போலீசார்
தஞ்சையில் சமூக வலைதளத்தில் போலி விளம்பரத்தை அனுப்பி வாலிபரிடம் ரூ.23 ஆயிரத்தை மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் சமூக வலைதளத்தில் போலி விளம்பரத்தை அனுப்பி வாலிபரிடம் ரூ.23 ஆயிரத்தை மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி விளம்பரம்
தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் செல்போன் வாங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தன்னுடைய வாட்ஸ்அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.
அப்போது அதில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ.23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் போடப்பட்டிருந்தது. உடனே அந்த வாலிபர் விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டார்.
ரூ.23 ஆயிரம் மோசடி
அப்போது எதிரே பேசிய மர்மநபர் குறிப்பிட்ட செல்போனிற்கான பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அதன் படி மர்மநபர் கூறி வங்கிக்கு ஆன்லைன் மூலம் 3 தவணைகளாக ரூ.23 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தான் வாங்கிய செல்போன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அந்த மர்மநபரை தொடர்பு கொண்ட வாலிபர் செல்போன் குறித்து கேட்டுள்ளார். ஆனால் உரிய பதில் அளிக்கவில்லை.
மேலும் வாலிபர் அனுப்பிய பணத்தையும் திருப்பி அனுப்பவில்லை. அப்போது தான் தன்னிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை மோசடி செய்யப்பட்டதை அறிந்தாா். இதுகுறித்து தஞ்சை மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த வாலிபர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.