அபிராமி மகளிர் கல்லூரியில் இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் கல்லூரி மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குடியாத்தம் அபிராமி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் கே.முருகவேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் கே.ஜோதிராம் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு என்.கோடீஸ்வரன் தலைமையில் போலீசார் இணைய வழி குற்றங்கள், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் போலியாக உருவாக்கப்படும் செயலிகள் குறித்தும் கடன் செயலிகள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு போலீசார் வழங்கினர். ்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் காவல்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
==========
2 காலம்