இணையவழி குற்றங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்


இணையவழி குற்றங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
x

நீடாமங்கலத்தில் இணையவழி குற்றங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் தினம் மற்றும் இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மூலம் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு நிலைய முதல்வர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி பயிற்சி அலுவலர்கள், இளநிலை பயிற்சி அலுவலர் குமரகுரு, மொழி மற்றும் மென்திறன் பயிற்றுனர் பன்னீர்செல்வம் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






Next Story