தென்காசி பகுதியில் சூறைக்காற்று; 5 ஆயிரம் வாழைகள் சேதம்
தென்காசி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இலத்தூர், சீவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, தக்காளி, சின்ன வெங்காயம், வாழை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் இலத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று முன்தினம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றில் 5000 -க்கும் மேற்பட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story