ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது 'மாண்டஸ் புயல்'


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது மாண்டஸ் புயல்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 10 Dec 2022 6:51 AM IST (Updated: 10 Dec 2022 7:32 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது.

சென்னை,

வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டது.

இதன் காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது. இதனையடுத்து, மாண்டஸ் புயலானது இரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story