தர்மபுரியில் மாவட்ட சிலம்பம் போட்டி


தர்மபுரியில் மாவட்ட சிலம்பம் போட்டி
x

தர்மபுரியில் மாவட்ட சிலம்பம் போட்டி நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு சங்க மாவட்ட தலைவர் மாது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். இந்த போட்டிகளை முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், குழந்தைகள் நல அரசு மருத்துவர் டாக்டர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மைதிலி நன்றி கூறினார்.


Next Story