சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி:
பாளையங்கோட்டை அருகே புதுக்குளம் கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் சிலம்பம் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். பதுவை சிலம்ப பள்ளி தலைவர் ஜோசப்குமார் வரவேற்று பேசினார்.
நெல்லை அமெச்சூர் சிலம்பம் சங்க பொருளாளர் காணி, மின்வாரிய இளநிலை பொறியாளர் ஊசிக்காட்டான், ரூபன், பஞ்சாயத்து துணைத்தலைவர் அந்தோணியம்மாள், நீ இந்திரன் சிலம்ப பள்ளி செயலாளர் சிவகுமார், வேந்தன் நெல்மணி சிலம்ப பள்ளி செயலாளர்கள் சின்னத்துரை, சதீஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பதுவை சிலம்பம் பள்ளி செயலாளர் ஜென்சி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story