சிலம்ப போட்டி


சிலம்ப போட்டி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை,

நேரு யுவகேந்திர மற்றும் போதிதர்மா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப், ஜான் பாவா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி சடையன் காடு அஸ்பயர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு துறை இளைஞர் நல அலுவலர் ரமேஷ் கண்ணன், நேரு யுவகேந்திரா பிரவீன் குமார், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து, நெல்லை ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஜான் பாவா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தையும், உதய நிலா சிலம்பு பாசறை 2-ம் இடத்தையும், போதிதர்மா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் தேவகோட்டை 3-ம் இடத்தையும் பிடித்தது. பாண்டியன், சவுந்தர பாண்டியன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

1 More update

Next Story