பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி
மந்தாரக்குப்பத்தில் பள்ளி மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி நடைபெற்றது.
மந்தாரக்குப்பம்,
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கல்வித்துறை சார்பில் மந்தாரக்குப்பம் என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான சிலம்பம் தற்காப்பு பயிற்சி விழா நடைபெற்றது. இதற்கு என்.எல்.சி. கல்வித்துறையின் பொதுமேலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். என்.எல்.சி. செயல் இயக்குனர் ராணிஅல்லி பயிற்சியை தொடங்கி வைத்தார். பொது மேலாளர் நாகராஜன், என்.எல்.சி. விளையாட்டு துறையின் துணை பொது மேலாளர் முருகன் ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பேசினர். சிலம்பம் பயிற்சியாளர் பார்த்தசாரதி குழுவினர் சிலம்ப தற்காப்பு கலைகளை மாணவிகளுக்கு செய்து காட்டினர். விழாவினை என்.எல்.சி. பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் என்.எல்.சி. பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார். இதில் 200 மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.