டி.அய்யப்பபுரத்தில் அனுமன் ஜெயந்தி விழா: வருகிற 23-ந் தேதி நடக்கிறது


டி.அய்யப்பபுரத்தில்  அனுமன் ஜெயந்தி விழா:  வருகிற 23-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.அய்யப்பபுரத்தில் அனுமன் ஜெயந்தி விழா வருகிற 23-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் தாலுகா மருதன்வாழ்வு பஞ்சாயத்திலுள்ள டி.அய்யப்பபுரத்தில் அனுமன் தியான பீடம் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா வருகிற 23-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் உபன்யாசமும் நடக்கிறது. காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மகாஅபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. யாகசாலை பூஜைகளை வானரமுட்டி ராமசாமி அடிகளார் நடத்தி வைக்கிறார். விழாவில் குலசேகரராமானுஜ ஜீயர் மடம் ராமஅப்ரமேயராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.


Next Story