தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்பொதுமக்கள் தினமும் கோரிக்கை மனு கொடுக்கலாம்


தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்பொதுமக்கள் தினமும் கோரிக்கை மனு கொடுக்கலாம்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்பொதுமக்கள் தினமும் கோரிக்கை மனு கொடுக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தினமும் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை பொதுமக்கள் நேரடியாக வந்து கோரிக்கை மனு கொடுக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 34 மனுதாரர்கள் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமும் கோரிக்கை மனு

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனுகொடுக்க விரும்புகிறவர்கள் தினமும் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக சந்தித்து மனு கொடுக்கலாம். அவ்வாறு மனு கொடுக்க வருபவர்கள் எந்தவித சிபாரிசும் இன்றி நேரடியாகவே தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வலியுறுத்தி உள்ளார். இதனை அறிவிப்பு பலகையாகவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வைத்து உள்ளனர். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story