தினந்தோறும் சிறப்பு பூஜைகள்


தினந்தோறும் சிறப்பு பூஜைகள்
x

கீழப்பாவூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் தினம் தோறும் வெவ்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு நேற்று முதல் நாள் பாதாம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.


Next Story