தினசரி-சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு இயக்கப்படும் தினசரி மற்றும் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூருக்கு இயக்கப்படும் தினசரி மற்றும் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆழித்தேரோட்டம்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச்செயலாளர் தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) ஆழித்தேரோட்டம் கொண்டாடப்பட உள்ளது.
கூடுதல் பெட்டிகள்
இந்த தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் வருவாா்கள். மற்ற போக்குவரத்தை காட்டிலும் கட்டணம் குறைவு என்பதால் மக்கள் அனைவரும் ெரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
தவிர சர்க்கரை நோயாளி போன்றவர்களின் இயற்கை உபாதைக்கு ெரயில் பயணமே மிகச் சிறந்தது.
மக்களின் நிலையை கவனத்தில் கொண்டு தெற்கு ெரயில்வே சென்னை- திருவாரூர், திருச்சி-தஞ்சாவூர்-திருவாரூர், கரைக்குடி-திருவாரூர், மன்னார்குடி-திருவாரூர், சிதம்பரம்-மயிலாடுதுறை-திருவாரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் ெரயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.