பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும்  தினத்தந்தி புகாா் பெட்டி
x

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி

ஈரோடு

இருக்கைகள் அமைக்கப்படுமா?

புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். அவ்வாறு வரும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கைகள் இல்லை. இதன்காரணமாக பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையில் பயணிகள் இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி அவர்களுக்கு இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.

பாலம் சீரமைக்க வேண்டும்

கொடுமுடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுள்ளிமடையில் இருந்து குதிரைக் கல்மேடு வரை செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் இடைபட்ட பகுதியில் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1½ ஆண்டாக சீரமைக்கப்படவில்லை. இதனால் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசாம்பாளையம், பழனியாண்டவர் கோவில் செல்பவர்கள் என ஏராளமானோர் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே இந்த பாலத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பள்ளக்காட்டூர்.

பஸ்கள் வந்து செல்லுமா?

சத்தியமங்கலத்தில் இருந்து புதுப்பீர்கடவு கிராமத்துக்கு முறையாக அரசு டவுன் பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாந்து செல்கிறார்கள். அவசரம் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் சரியாக வராததால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே புதுப்பீர்கடவுக்கு பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுபீர்கடவு.

இடம் மாற்றவேண்டும்

நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி குளத்துப்பாளையத்தில் ரேஷன் கடை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் காற்று காரணமாக ரேஷன் கடை குடோனின் ஓட்டு பகுதி சிதிலமடைந்து மழை நீர் ஒழுகியது. இதனால் கடையில் இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் நனைந்து சேதமடைந்தன. எனவே இங்குள்ள ரேஷன் கடையை இடம் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வேமாண்டம்பாளையம்.

கழிவுகளை அகற்ற வேண்டும்

கோபியில் உள்ள முத்துசா வீதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. அவ்வாறு தூர்வாரப்பட்ட கழிவுகள் சாக்கடை கால்வாயின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டது. ஆனால் சாக்கடை கழிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த வீதி மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்த வீதி. சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த ரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மேல்நிலைப்பள்ளி அருகே ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக அங்குள்ள வளைவில் திரும்பும்போது இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கருங்கல்பாளையம்.


Next Story