தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு

திருச்சி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட சவேரியார் கோவில் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு கடந்த 2 வாரத்திற்கு மேல் எரியாமல் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி செயின் பறிப்பு உள்பட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சவேரியார் கோவில் தெரு, திருச்சி.

ஆபத்தான மின் கம்பம்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம், ஜெகநாதபுரம், திருமகள் தெருவில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பலத்த காற்று வீசும்போது இந்த வழியாக பொதுமக்கள் நடந்து சென்றால் அவர்கள் மீது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியமங்கலம், திருச்சி.

பன்றிகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி, மாநகராட்சி 65-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராணி மெய்யம்மை நகர், முத்து நகர், ஈ.பி‌.காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ராணிமெய்யம்மைநகர், திருச்சி.

போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் நான்கு, இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஏராளமான வாகனங்கள் வருவதினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்லும்போது பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில், மலைக்கோட்டை, திருச்சி.


Next Story