தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியில் இருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் குந்தாணிபாளையம் காலனிக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்நிலையில் இந்த நெடுஞ்சாலை வழியாக வரும் பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களும் அதிகமாக சென்று வருகின்றன. இந்நிலையில் குந்தாணிபாளையம் காலனி பிரிவு சாலையில் செல்லும்போது தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்து விபத்தை தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ராமச்சந்திரன், குந்தாணிபாளையம், கரூர்.
தூர்வாரப்படாத வாய்க்கால்
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே பேச்சிப்பாறையில் இருந்து நடையனூர் வழியாக கோம்புப்பாளையம் புகழூர் கால்வாயில் உபரிநீர் கலக்கும் வகையில், உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ந்து வெளியேறும் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கால்வாய் நெடுகிலும் பல்வேறு வகையான செடி, கொடிகள் ஆள் உயரம் முளைத்துள்ளது. இதனால் உபரி நீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக உபரிநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
சதீஷ், நடையனூர், கரூர்.