தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பயன்படுத்த முடியாத குடிநீர்

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வினியோகிக்கப்படும் குடிநீரில் உப்புநீராக வருவதினால் இப்பகுதி மக்கள் அதனை குடிக்கவோ, சமைக்கவோ பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பரத், தாத்தையங்கார்பேட்டை, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை, பழவேரி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர் வாரப்படாமல் தூர்ந்துபோனதால் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திலகவதி, பெட்டவாய்த்தலை, திருச்சி.

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம், ராமரெட்டிபட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இளையராஜா, திருச்சி.


Next Story