தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொடக்கப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தும்பலம் பெருமாள்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியை மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஆங்கில வழியில் கல்வி பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கோவிந்தம்மாள், தும்பலம் பெருமாள்பாளையம், திருச்சி.
கோவில் இடம் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூர் பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதனை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மேலும் சிலர் கோவில் இடங்களை ஆக்கிரமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாபுத்தூர், திருச்சி.
பயணிகள் அவதி
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே அரியலூர், பெரம்பலூர் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகளின் தேவைக்காக இலவச கழிவறை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்களும், பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கழிவறை கட்டண கழிவறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புரத்தில் இருந்து வரும் பயணிகள் கட்டணம் செலுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தர்மராஜ், திருச்சி.
மின் தடையால் மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், கல்லக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து நத்தமாங்குடி, ஆலங்குடி, கல்விக்குடி, முள்ளால், செங்கரையூர், செம்பரை, திண்ணியம், கோமாகுடி போன்ற பல கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட கிராமங்களுக்கு கல்லக்குடியிலிருந்து வரும் மின்பாதை 10 கிலோ மீட்டர் வருவதால் சிறிய சாரல் மழை, காற்று வீசினால் கூட உடனடியாக மின்சாரம் தடைபடுகிறது. மின் தடையை கண்டு பிடிக்க பல மணி நேரம் ஆகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குறைந்த பட்ச மின்சாரமே கிடைக்கின்றது. இதனால் மின்மோட்டார்கள், வீட்டில் உள்ள மின் உபயோக பொருட்கள் சேதம் அடைகிறது. எனவே இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நத்தமாங்குடி, திருச்சி.
மந்தமான சாலை விரிவாக்க பணி
திருச்சி மாவட்டம், மாத்தூர்-டி.வி.எஸ். டோல்கேட் வரையிலான சாலை விரிவாக்கப்பணி மிக மந்தமாக நடந்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.